உங்களுக்கு புகழ் சிவாங்கி பிடிக்குமா? இல்ல பிடிக்காதா? எதுவா இருந்தாலும். இந்த செய்தி உங்களுக்குத்தான்!!! பிரேக்கிங் நியூஸ்!!!

Tamil News

விஜய் டிவியில் மிகப் பிரபலமான சீரியல்கள் என பல இருந்தாலும். ரியாலிட்டி ஷோக்களில், நம்பர் 1 நம்பர்  2 இடத்தில் இருப்பது நம் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்… பிக்பாஸ் நான்கு சீசன்-களும், குக் வித் கோமாளி இரண்டு சீசன் களையும் முடித்துள்ளது..

முக்கியமாக.. குக் வித் கோமாளி சீசன் ஒன்றை விட இரண்டாவது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.. தற்போது பிக்பாஸ் 5வது சீசனை விட ரசிகர்கள் அதிக ஆர்வமாக எதிர்ப்பார்ப்பது குக் வித் கோமாளி 3வது சீசன். அதற்கு காரணம் என்னத்தான் பிக் பாஸ் பிரபலமாக இருந்தாலும். அதில் சர்ச்சைகளும், பிரச்சனைகளுமே முதல் இடத்தில் உள்ளது..

ஆனால்.. குக் வித் கோமாளி சீசனை பொறுத்தவரை.. காமெடி-க்கே முதல் இடம்.. அதிலும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் வாழ்க்கையே சிக்கலில் சென்றிருந்த நிலையில் அதன் காமெடி கலாட்டாக்கள் மக்கள் மத்தியில் ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டராக ஜொலித்தது// அதுவும் மிகவும் புதுமையான முறையில் கலகலப்பாக கொஞ்சம் சமையல் விஷயங்களுடன் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் மீண்டும் மீண்டும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பினாலும் பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள்.அந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்துள்ளது… அதற்கு ஒரு பெரிய பங்கு அதில் கோமாளியாக பங்கேற்றவர்களுக்கு சேரும்,..

வரும் செப்டம்பர் மாதம் குக் வித் கோமாளி 3வது சீசன் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு சோகமான செய்தி என்னவென்றால் புகழ் மற்றும் ஷிவாங்கி இந்த 3வது சீசன்-ல் கலந்துக்கொள்ள வில்லையாம்…

காரணம் அவர்கள் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி இருப்பதால் சிறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் வருவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் இதில் 90 சதவீதம்… உண்மை என்று அந்த சேனல் ஆட்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்>..