நான்கு வருட கனவு பாரதி கண்ணமா சீரியல் நடிகையின் நெகிழ்ச்சி பதிவு! அப்ப இனிமேல் சீரியலுக்கு டாட்டாவா? இணையத்தில் வைரல் !!

Tamil News

தமிழில் பல சீரியல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதில் டி.ஆர்.பி யிலும் ட்ரோலிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நம் பாரதி கண்ணமா சீரியல் தான்.. உண்மையில் ஒரு சீரியலை, ட்ரோல் பண்ணியே முதல் இடத்துக்கு கொண்டு வந்த சாதனை எல்லாம் இந்த சீரியலுக்கே பொருந்தும்…

பொதுவாக சீரியல் என்றால். அதில் வில்லனாகவோ? இல்லை வில்லியாக நடிப்பவர்களை சுற்றி ட்ரோல்களும், வெறுப்புகளூம்.. செல்லும். ஆனால் இந்த சீரியலை பொறுத்தவரை.. அதில் கதாநாயகனே நெகடிவ் ரோலில் நடிப்பது தான் இந்த ட்ரோல்களுக்கு முக்கிய காரணம்…

அதற்காக இந்த சீரியலில் வில்லி என்ற ரோல் இல்லையா? என்றெல்லாம். இல்லை.. ஹீரோ, ஹீரோயின் மற்றவர்கள் யார் பேச்சையும் கேட்காமல்.. வில்லி சொல்வதை மட்டுமே கேட்கும் அளவுக்கு .. அதில் வெண்பா ரோல் மிக முக்கியமானது.. இதில் அந்த கதாப்பாத்திரமாக நடிப்பவர்தான் நடிகை பரினா அசத்…

இந்நிலையில் அவர் இன்று அவருடைய இன்ஸ்டா பக்கம் மூலமாக, ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார்.. அதில் அவர்,.. “ நான் கர்ப்பமாக இருக்கிறேன்.. இன்னும் நான்கு மாதத்தில் எங்களுடைய உயிர் இந்த பூமிக்கு வந்து விடும்.. அந்த குழந்தைக்கும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் இப்படிக்கு பாரதி கண்ணம்மா தொடரின் “எதிர் நாயகி” வெண்பா என பதிவிட்டுள்ளார்..

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

அதைப்பார்த்த பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.. அப்போ இனிமேல் சீரியலுக்கு டாட்டாவா? நடிக்க மாட்டாரா? என்றெல்லாம் கருத்துகள் வந்துள்ளது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…