மீண்டும் களம் இறங்கிய சரவணன் மீனாட்சி காதல் ஜோடி!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!! முழு விபரம் உள்ளே!!!

Tamil News

சின்னத்திரையில் வண்ணத்திரையை மிஞ்சும் அளவுக்கு காதல் காட்சிகளை-யும், குடும்ப பாசம், அண்ணன் தங்கச்சி பாசம் இதை எல்லாம் அழகாய் காட்டிய சீரியல் சரவணன் மீனாட்சி சீசன் 1. இதில் ஜோடியாக நடித்தவர்கள் தான். மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீ்ஜா.. சீரியலைத் தாண்டி இருவரின் ஜோடிப்பொருத்தம் மக்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்தது..

இவர்கள் இருவரும் அதற்கு முன் அதே விஜய் டிவியில் மதுரை என்ற சீரியலில் நடித்திருந்தனர். அதில் அவர்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் தான் சரவணன் மீனாட்சி.. அதையே அடுத்த சீரியலுக்கு தலைப்பாக்கி, சின்னத்திரையில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது.. நாளைடைவில். மக்கள் அனைவருமே.. சீரியலில் மட்டுமல்ல.. நிஜத்திலுமே. இவர்கள் தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என் ஆசைப்பட்டனர்..

அதை பொய்யாக்காமல்.. இருவரும்.. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி பெரியவர்கள் முன்னிலையில் திருப்பதியில் உண்மையாகவே திருமணம் செய்துக்கொண்டனர்… உண்மையில் அது பல ரசிகர்களின் கனவுக்கூட.. அந்நிலையில் இவர்கள் இருவரும் திரும்பவும், சீரியல் நடிப்பார்களா? என எதிர்ப்பார்த்த நிலையில் மறுபடியும் அதே விஜய் தொலைக்காட்சியில் மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்தனர்…

தீடீரென்று அடுத்து என்ன? என நினைக்கையில் இருவரும் சேர்ந்து கல்யாணம் கன்டிசன் அப்ளை என்ற வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் உலகில் காலடி எடுத்து வைத்தன்ர்.. சீரியலில் மட்டுமல்லாமல்.. வெப்சீரிஸிலும் பட்டையைக் கிளம்பினார்கள்.. அதன் வெற்றியைத் தொடர்ந்து.. சீசன் 2 சீசன் 2 என வெளியானது..

இப்போது மிர்ச்சி செந்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.. அதுவும் மிக சூப்பராக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.. இந்நிலையில் அவர் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.. அதில் ஏற்கனவே முத்துராசுவை சுட்டது யார் என்ற தலைப்பில் சில பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார்…

அதையடுத்து இப்போது.. அவர். அவர் மனைவி ஸ்ரீ்ஜா-வுடன் சேர்ந்து என்டே மாமியார் வீடு கேரளா என்ற சீரிஸை அவர் சேனலிலேயே, ஆரம்பிக்க உள்ளார்.. அதன் புரோமோ கீழே.. அவங்க சேர்ந்து பண்ணா எல்லாமே வெற்றிதான்.. இதுவும் கண்டிப்பா வெற்றியாகும்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…