நீண்ட வருடங்களுக்கு பிறகு, சினிமா-வுக்கு வரும் நடிகை ஷாலினி!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!! அதுவும் இவர் படத்திலேயா? அப்போ சூப்பர் டூப்பர் ஹிட் தான்!!!

Tamil News

நடிகர் அஜித்தை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஷாலினி, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்த ஷாலினி, கடந்த 1997- ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரவேண்டும் என பல திரைப்படங்களில் நடித்தார்.

அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினிக்கும் அஜித்துக்கு இடையே காதல் மலர்ந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

திருமணம் முடிந்த பிறகு நடிகை ஷாலினி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ஷாலினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஷாலினி முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…