ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நம் தமிழக வீரர் நடராஜன்.! கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.! அவரே பகிர்ந்த புகைப்படம்.!

Tamil News

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடிய சேலம் – சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் விளையாடி, கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்தார். ஐபிஎல் தொடரில் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடராஜனுக்கு ஆஷிரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னர், டி20 தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்டை வீழ்த்தி T20 தொடரை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

T20 தொடரை வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடரை வென்றதற்கான கோப்பையையும், ஹர்திக் பாண்யா தொடர் நாயகன் விருது வென்றதற்கான கோப்பையையும் நடராஜன் கைகளில் கொடுத்து அழகு பார்த்தார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் தற்போது நடந்து வரும் வலைப்பயிற்சியில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இருக்கும் தமிழக வீரர் நடராஜன் தேவாலயம் முன்பு நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருடன் வாஷிங்டன் சுந்தரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.