இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட அறிந்தும் அறியாமலும் பட நடிகையா இது? நம்பவே முடியல இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!!

Cinema News

தமிழ் சினிமாவில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா, பிரகாஷ்ராஜ் போன்றோர் நடித்து வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த சமிக்ஷா தனது காதலனை திருமணம் செய்து கொண்ட செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மனதோடு மழைக்காலம், மெர்குரிப்பூக்கள், தீ நகர் போன்ற படங்களில் நடித்தார் சமிக்ஷா. அதன்பின் 2012ஆம் ஆண்டிற்கு பின்பு பஞ்சாபி படங்களில் அதிக கவனம் செலுத்தினார்.

பின்னர் திருமணம் செய்து கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் வி வாகரத்து வாங்கினார். தற்பொழுது திடீரென்று தனது காதலனான சிங்கப்பூரை சேர்ந்த தொழிலதிபரும் பாடகருமான சாயில் ஒஸ்வாலை திருமணம் செய்து கொண்டார். சமிக்ஷா மற்றும் சாயில் ஒஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும்.