ஏப்பா.. குக் வித் கோமாளி 2 ஃபைனல் ஷூட் ஓவர் ஆயிடுச்சாம் அதோட டைட்டில் வின்னர் கூட இவர் தானாம்?

Tamil News

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ஃபைனல் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது என்றும், பாபா பாஸ்கர் மாஸ்டர் தான் டைட்டில் வின்னர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 14 ஆம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 2 ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், பாபா பாஸ்கர், அஸ்வின் குமார், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கனி, ஷகீலா, தீபா, மதுரை முத்து மற்றும் வைல்டு கார்டு மூலமாக ரித்திகா ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் இணைந்து பாலா, மணிமேகலை, பப்பு, விஜே பார்வதி, புகழ், சக்தி, சரத் ராஜ், ஷிவாங்கி, சுனிதா, டைகர் தங்கதுரை ஆகியோர் கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர். ஒரு சமையல் நிகழ்ச்சியை இப்படி காமெடியாக கொடுக்கும் முடியும் என்றால் அது விஜய் டிவியால் மட்டுமே முடியும் என்று அண்மையில் சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில், சமையல் உடன் சேர்ந்து பாசமும், காதலும் பரிமாறப்படுகிறது. புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், பாபா பாஸ்கர் – பாலாவின் அப்பா – மகன் பாசம், ஷகீலாவின் அம்மா பாசம், புகழின் காதல் பாசம் என்று ஒவ்வொரு விதமாக அன்பும், காதலும் பரிமாறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு தற்போது கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், பவித்ரா லட்சுமி மற்றும் ஷகீலா ஆகிய 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர். வரும் வாரத்தில் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. அதற்கான ஃபைனல் ஷூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, யார் டைட்டில் வின்னர் என்பதற்கான தகவலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில், டான்ஸில் மட்டும் இவர் மாஸ்டர் அல்ல, சமையலிலும் இவர் தான் மாஸ்டர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று கூறும் வகையில், பாபா பாஸ்கர் தான் டைட்டில் வின்னர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.